சரத் பொன்சேகா ஆட்சிக்கு வந்ததும் ஏ-9 வீதியூடாக பொதுமக்கள் தங்கு தடங்கலின்றிப் போக்குவரத்துச் செய்ய அனுமதி: ரணில் விக்கிரமசிங்க
சரத் பொன்சேகா ஜனாதிபதி தேர்தலில் வென்று ஆட்சிக்கு வந்ததும் ஏ-9 வீதி ஊடாக காலை 6மணி தொடக்கம் மாலை 6 மணி வரை பொதுமக்கள் தடங்கலின்றிப் போக்குவரத்துச் செய்ய அனுமதி வழங்கப்படும். அத்துடன் பின்னர் 24 மணிநேரமும் போக்குவரத்துக்காகத் திறக்கவும் ஏற்பாடு செய்யப்படுமென சனிக்கிழமை (12, டிசம்பர்) மாலை யாழ்ப்பாணத்தில் செய்தியாளர் மாநாட்டில் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
ஐ.தே.க தலைவர் ரணில் விக்கிரமசிங்க இரண்டு நாள் பயணமாக நேற்று யாழ்ப்பாணம் சென்றிருந்தார். நேற்றுக் காலை நல்லூர் கந்தசாமி ஆலயத்தில் வழிபாடுகளை மேற்கொண்ட அவர், பின்னர் பல்வேறு தரப்பினரையும் சந்தித்துக் கலந்துரையாடினார்.
நேற்று மாலை அவர் செய்தியாளர் மாநாடு ஒன்றை நடத்தியிருந்தார்.
அங்கு கருத்து வெளியிட்ட அவர், சரத் பொன்சேகா ஆட்சிக்கு வந்ததும் ஏ-9 வீதி ஊடாக காலை 6மணி தொடக்கம் மாலை 6 மணி வரை பொதுமக்கள் தடங்கலின்றிப் போக்குவரத்துச் செய்ய அனுமதி வழங்கப்படும்.
அத்துடன் பின்னர் 24 மணிநேரமும் போக்குவரத்துக்காகத் திறக்கவும் ஏற்பாடு செய்யப்படும்.
தமிழ் மக்கள் ஆட்சி மாற்றத்துக்காக வாக்களிக்க வேண்டும். கடந்த ஜனாதிபதி தேர்தலைப் போன்று இந்த முறையும் தேர்தலைப் புறக்கணிக்கக் கூடாது.
ஆட்சி மாற்றத்தின் மூலம் இனப்பிரச்சினைக்கு உகந்த தீர்வு ஒன்று காணப்படும். அதற்கு சகல தரப்பினரதும் ஒத்துழைப்புகள் பெறப்படும்.
சரத் பொன்சேகாவின் சார்பில் தான் இந்த வாக்குறுதிகளை வழங்குவதாகவும், இந்த வாக்குறுதிகளுக்கு தாமே பொறுப்பு என்றும் செய்தியாளர்களிடம் கூறினார் ரணில் விக்கிரமசிங்க.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply