சமாதானம் மக்களுக்கு பல்வேறு வாய்ப்புக்களை ஏற்படுத்தியுள்ளது
யாழ்ப்பாண மீன் பிடித் தொழிலாளர்களுக்கு மட்டுமன்றி நாட்டின் ஏனைய பகுதி மக்களும் சமாதானத்தினால் நன்மை அடைந்துள்ளனர்.சமாதானம் மக்களுக்கு பல்வேறு வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுத்துள்ளதாக இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் பீட்டர் ஹெய்ஸ் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கான இரண்டு நாள் விஜயத்தை முடித்துக் கொண்டதன் பின்னர் ஊடகவியலாளர் மத்தியில் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பிரித்தானிய உயர்ஸ்தானிகர் பீட்டர் ஹெய்ஸூடன் நோர்வே தூதுவரும் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ளார். குறித்த இருவரும் யாழ்ப்பாண பிராந்தியத்திற்குப் பொறுப்பான படைத்தளபதிகளுடன் சந்திப்புக்களை நடத்தியுள்ளனர்.
இடம்பெயர்ந்த மக்கள் வாழும் முகாம்களுக்கும், மத வழிபாட்டுத் தலங்களுக்கும் அவர்கள் விஜயம் செய்துள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply