கைத்தொழில்துறைசார் தலைமைகளுடனான தொடர்பு வலையமைப்பை பேணுவதில் பெண் முயற்சியாளர்கள் பின்னடைவு : வாய்ப்பு வழங்கப்படுவதில்லை என ஏற்றுமதி அபிவிருத்தி சபை விசனம்

இலங்கையின் பெண் முயற்சியாளர்களுக்கு கைத்தொழில்துறைசார் தலைமைகளுடன் தொடர்புகளைப் பேணுவதற்கான வாய்ப்புக்கள் மிகக்குறைந்தளவிலேயே கிட்டுவதாக இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை விசனம் வெளியிட்டுள்ளது.

பெண்கள் முயற்சியாண்மை அபிவிருத்தி செயற்திட்டத்தின்கீழ் பதிவுசெய்யப்பட்ட பெண் முயற்சியாளர்களுக்கான அறிவு பகிரல் மற்றும் தொடர் வலையமைப்பு செயலமர்வொன்று அண்மையில் ஏற்றுமதி அபிவிருத்தி சபையினால் ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது. அதில் சிறிய மற்றும் நடுத்தர முயற்சியாளர்களுக்கான நேரடி ஏற்றமதியாளர்கள், மறைமுக ஏற்றுமதியாளர்கள், தொழிற்துறை நிபுணர்கள் உள்ளடங்கலாக சுமார் 50 பெண் முயற்சியாளர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

அச்செயலமர்வின்போது கைத்தொழில்துறைசார் தலைவர்களுடன் தொடர்பு வலையமைப்பைப் பேணுவதற்கான சந்தர்ப்பங்கள் குறைவாக இருப்பதனால் பெண் முயற்சியாளர்கள் முகங்கொடுத்துவரும் சவால்கள் மற்றும் தடைகள் குறித்து விசேட கவனம்செலுத்தப்பட்டதாக ஏற்றுமதி அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது.

அத்தோடு இந்த செயலமர்வின் ஊடாக முயற்சியாளர்களுக்கு இடையிலான தொடர்புகள் வலுப்படுத்தப்பட்டதாகவும், அறிவு மற்றும் திறன்களைப் பகிர்வதற்கான வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டதாகவும், பெண் முயற்சியாளர்கள் சர்வதேச சந்தைக்குள் பிரவேசிப்பதற்கு அவசியமான வாய்ப்புக்கள் பற்றி ஆராயப்பட்டதாகவும் ஏற்றுமதி அபிவிருத்தி சபை குறிப்பிட்டுள்ளது.

மேலும் இதனூடாக பெண் முயற்சியாளர்கள் கைத்தொழில்துறைசார் தலைவர்களுடன் தொடர்புகளைப் பேணுவதற்கும், வர்த்தக நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதற்கும் அவசியமான வழிகாட்டல்கள் வழங்கப்பட்டதாகவும் அச்சபை நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply