பூசா சிறைச்சாலையில் விசேட சோதனை நடவடிக்கை கையடக்கத் தொலைபேசி உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் மீட்பு

பூசா சிறைச்சாலையில் நேற்று வியாழக்கிழமை (02) மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது கையடக்கத் தொலைபேசி உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் பூசா சிறைச்சாலையில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது கைதி ஒருவரின் சிறைக் கூண்டிலிருந்து இந்த பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதன்போது, கையடக்கத் தொலைபேசி, சார்ஜர், டேட்டா கேபிள் மற்றும் சிம் அட்டை உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதனையடுத்து, கைப்பற்றப்பட்ட பொருட்கள் அனைத்தும் மேலதிக விசாரணைகளுக்காக சிறைச்சாலை பொறுப்பதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply