நல்லூர் கந்தசுவாமி கோயிலில் யாழ். நூலகத்தை எரித்தவர்கள்

1982களில் யாழ். நூலகத்தை எரிப்பதற்கு தெற்கில் இருந்து தீப்பந்தத்தை விமானம் மூலம் எடுத்துச் சென்றவர்கள் இன்று நல்லூர் கந்தசுவாமி கோயிலுக்கு சென்று வழிபடுகின்றனர். என இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஹட்சன் சமரசிங்க தெரிவித்தார்.

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஹட்சன் சமரசிங்கவை கெளரவித்து கூட்டுத்தாபன தமிழ்ச் சேவை ஊழியர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் நடத்திய சேவை நலன் பாராட்டு விழாவில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு ஹட்சன் சமரசிங்க தெரிவித்தார்.

தொடர்ந்து அங்கு உரையாற்றிய ஹட்சன் சமரசிங்க, தெற்காசியாவிலேயே மிகவும் பிரசித்தி பெற்ற நூலகமாக யாழ். நூலகம் விளங்கியது. இது ரணில் விக்கிரமசிங்கவின் மாமாவான ஜே. ஆர். ஆட்சிக் காலத்திலேயே எரிக்கப்பட்டது. அப்போது ஐ. தே. கட்சியின் இளைஞர் அணிக்கு பொறுப்பாக இருந்தவரும் ரணில் விக்கிரமசிங்க, இவர்கள்தான் அன்று வடக்கினை நாசப்படுத்துவதற்கு திட்டம் தீட்டியவர்கள்.

இவர்கள் நாட்டுப் பற்றற்றவர்கள். இவர்கள் கதைப்பது, தூங்குவது சாப்பிடுவதெல்லாம் ஆங்கிலத்தில்தான். இவர்களிடம் மேலைத்தேய நாட்டுப்பற்றே உள்ளது. தமது தாய்நாட்டைப் பற்றி இவர்களுக்கு சிறிதளவேனும் அக்கறை இல்லை. 1983 ஜுலைக் கலவரம் நடைபெற்றபோது எனது தமிழ் நண்பர்களையெல்லாம் காடையர்களைக் கொண்டு கொலை செய்தார்கள்.

நான் ஜே. ஆர்., ஆர். பிரேமதாச, சந்திரிகா குமாரதுங்க, மஹிந்த ராஜபக்ஷ ஆகிய நான்கு ஜனாதிபதியிடமும் சேவை செய்துள்ளேன். நான்கு முறை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவராகவும் சேவையாற்றியுள்ளேன். அதில் மஹிந்த ராஜபக்ஷதான் ஒரு சிறந்த தலைவர். அவரை நீங்கள் ஆதரிக்க வேண்டும் எனவும் ஹட்சன் சமரசிங்க வேண்டிக்கொண்டார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply