ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும், சட்டமா அதிபருக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல்
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும், சட்டமா அதிபருக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் திங்கட்கிழமை (6) இடம்பெறவுள்ளது. கடந்த காலங்களில் மக்கள் மத்தியில் கடும் சர்ச்சையை ஏற்படுத்திய வழக்குகளின் முன்னேற்றத்தன்மை குறித்து இச்சந்திப்பின் கலந்துரையாடப்படவுள்ளதாக அறிய முடிகிறது.
அரசாங்கத்துக்கும், சட்டமா அதிபர் திணைக்களத்துக்கும் இடையில் பரஸ்பர வேறுபாடுகள் காணப்படுவதாக ஒருசில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ள பின்னணியில் ஜனாதிபதிக்கும், சட்டமா அதிபருக்கும் இடையில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.
மக்கள் மத்தியில் கடும் சர்ச்சையையும், எதிர்ப்பையும் ஏற்படுத்திய வழக்குகள் குறித்து சட்டமா அதிபர் திணைக்களம் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் மற்றும் அவற்றின் முன்னேற்றத்தன்மை குறித்து இதன்போது அவதானம் செலுத்தப்படவுள்ளது.
இதற்கு மேலதிகமாக குற்றவியல் வழக்கு தாக்கல் செய்யும் போது சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் அதனுடன் இணைந்த பிற நிறுவனங்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளது.அத்துடன் வழக்கு நடவடிக்கைகள் தாமதமாகுவதற்கான காரணம், சாட்சி மற்றும் சாட்சியாளர்களை பாதுகாப்பதில் உள்ள சிக்கல்கள் மற்றும் வழக்குக்கு பொறுப்பான அதிகாரிகள் முகங்கொடுக்கும் சவால்கள் குறித்து ஆராயப்படவுள்ளன.
கடந்த 1 ஆம் திகதி ஜனாதிபதி செயலக வளாகத்தில் நடைபெற்ற க்ளீன் ஸ்ரீ லங்கா செயற்திட்ட ஆரம்ப நிகழ்வில் உரையாற்றிய ஜனாபதிபதி அநுரகுமார திசாநாயக்க சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் சட்டமா அதிபர் குறித்து விசேடமாக சுட்டிக்காட்டினார்.
அரசியல் கட்டமைப்பு மற்றும் முழு சமூகத்திற்குள்ளும் ஊழல் மோசடி வீண் விரயம் என்பன பரவியுள்ளன.எமது முழு நாட்டுக்குள்ளும் புற்றுநோயினைப் போல பரவியுள்ளது.ஊழல் மோசடியை நிறுத்த நாம் பாரிய முயற்சிகளை எடுக்க வேண்டியுள்ளது. அதற்குள் எமது நாட்டின் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு பெரும் பணி உள்ளது. அதற்கான பணியை ஆற்றுவதற்கு தேவையான ஒத்துழைப்பை சட்டமா அதிபர் திணைக்களம் வழங்குமென நம்புகிறேன்.
அதேபோல் குற்றப்புலனாய்வு திணைக்களம் நீதிமன்றக் கட்டமைப்புக்கு மீண்டும் எமது நாட்டை ஊழல் மோசடி அற்றதாக மாற்றுவது தொடர்பிலான பணிக்காக அர்ப்பணிக்கும் என்று நம்புகிறோம். அரசியல் அதிகார தரப்பு என்ற வகையில் செயற்பாடுகள் வாயிலாக ஊழலை தடுக்கவும் மோசடியை தடுக்கவும் நாம் முன்மாதிரியாக செயற்படுவோம்.
ஆனால் அரசியல் தரப்பின் முன்னுதாரணமும் தலையீடும் மாத்திரம் போதுமானதல்ல. அதற்கான அரச நிறுவனங்கள் தம்மீதான பொறுப்புக்களை சரியாக புரிந்துகொண்டு அந்த மாற்றத்திற்கு தேவையான உதவி ஒத்துழைப்புக்களை வழங்குமாறு கோரிக்கை விடுத்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply