இலங்கைக்கு குறுகிய நேர விஜயம் செய்த சீன வெளிவிவகார அமைச்சர்

சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி ஞாயிற்றுக்கிழமை நமீபியாவுக்குச் செல்லும் வழியில் இலங்கையில் ஒரு குறுகிய பயணத்தை மேற்கொண்டுள்ளார். சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய குழுவின் அரசியல் பணியக உறுப்பினரும் சீன வெளியுறவு அமைச்சருமான வாங் யி, நமீபியாவுக்குச் செல்லும் வழியில் இலங்கையில் சிறிது நேரம் தங்கியிருந்துச் சென்றுள்ளார்.

இதன்படி, சீன உயர்மட்ட குழுவினர் இலங்கை நேரப்படி 14.18 மணிக்கு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததாக இலங்கை விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் (AASL) தெரிவித்துள்ளது.

18 உறுப்பினர்களைக் கொண்ட சீனக் குழுவை இலங்கைக்கான சீனத் தூதர் குய் ஜென்ஹாங், விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் தலைவர் ஹர்ஷா அபேவிக்ரம உள்ளிட்டவர்கள் வரவேற்றனர்.

சீன வெளியுறவு அமைச்சரும் அவரது குழுவும் இலங்கை நேரப்படி 16.23 மணிக்கு இலங்கையிலிருந்து புறப்பட்டனர். ஜனவரி 5 முதல் 11 வரை நமீபியா, காங்கோ குடியரசு, சாட் மற்றும் நைஜீரியா ஆகிய நாடுகளுக்கு வாங் யி விஜயம் செய்கின்றமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply