தடம் புரண்ட ரயிலால் ரயில் சேவைகளுக்கு பாதிப்பு
தெற்கு களுத்துறை ரயில் நிலையத்திற்கு அருகில் ரயில் ஒன்று தடம் புரண்டதன் காரணமாக ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. நேற்று (05) இரவு, மருதானையிலிருந்து தெற்கு களுத்துறைக்கு நோக்கி பயணித்த ரயில் பின்னர் ரயில் முனையத்திற்கு சென்ற போதே இவ்வாறு தடம்புரண்டது.
ரயில் தடம் புரண்டதையடுத்து, கடலோர ரயில் போக்குவரத்தில் ஒரு ரயில் மருங்கு முற்றிலும் தடைப்பட்டது.
தற்போது, தடம் புரண்ட ரயிலை ரயில்வே ஊழியர்கள் மீள் தடமேற்றியுள்ள போதும், இன்று காலை வரை ஒரு மருங்கின் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, தெற்கு களுத்துறை ரயில் நிலையத்திலிருந்து இயங்கும் அனைத்து ரயில்களும் ஒரு மருங்கிற்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply