ரஷ்யப்படையில் சிக்கியுள்ள எமது உறவுகளை மீட்டு தாருங்கள் : ஜனாதிபதிக்கு சென்ற கடிதம்
ரஷ்யப்படையில் வலிந்து இணைக்கப்பட்டுள்ள எமது உறவுகளை பாதுகாப்பாக மீட்டுத்தருவதற்கு உடனடியாக நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதி மற்றும் வெளிவிவகார அமைச்சரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து ரஷ்யப்டையில் சிக்கியுள்ளதாக கூறப்படுவர்களின் தாய்மார் னாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கு தாய்மார் கடிதம் அனுப்பியுள்ளனர்.
எமது உறவுகள் முகவர்கள் ஊடாக ஐரோப்பாவுக்குச் செல்வதற்காக பயணமாகியபோது இறுதித் தருணத்தில் ரஷ்யாவின் ஊடாக பயணத்தினை மேற்கொள்ளுமாறு பணிக்கப்பட்டனர்.
அதற்கமைவாக அவர்கள் ரஷ்யாவுக்குச் சென்றபோது அங்கு இலங்கை இராணுவத்தில் கடமையாற்றிய அதிகாரியொருவர் அவர்களை சில நாட்களுக்கு பராமரித்ததோடு பின்னர் ரஷ்ய படையில் பயிற்சிகளைப் பெறுவதற்கான இணைப்புச் செய்துள்ளார்.
அப்போதும் கூட அவர் அடையாள அட்டையைப் பெறுவதற்காகவே அவ்வாறு செய்ததாக கூறியுள்ளார். எனினும் பயிற்சியின் பின்னர் எமது உறவுகள் போர்க்களத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
அவர்களை மீட்டுத்தருமாறு ஏற்கனவே டிசம்பர் 2ஆம் திகதி நாம் எழுத்துமூலமான கோரிக்கையை விடுத்துள்ளபோதும் இதுவரையில் இலங்கையின் வெளிவிவகார அமைச்சு எவ்விதமான நடவடிக்கைகளையும் எடுத்ததாக நாம் அறியவில்லை.
எமக்கும் வெளிவிவகார அமைச்சு எவ்விதமான பதில்களையும் வழங்கவில்லை. இந்நிலையில், எமது உறவுகளுடன் காணப்பட்ட தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
இற்றையக்கு ஒருமாதமாக எமக்கு எந்தவிதமான பதில்களும் அளிக்கப்படாதுள்ள நிலையில் எமது உறவுகளை மீட்டுத் தருவதற்காக உரிய நடடிவடிக்கைகளை விரைந்து எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
விசேடமாக, எமது அன்புக்குரியவர்கள் தொடர்புகள் துண்டிக்கப்படுவதற்கு முன்னதாக அவர்கள் உயிருக்கு ஆபத்தான போர்க்களத்தில் இருப்பதாக வெளிப்படுத்தியிருந்தார்கள். அவர்களின் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருந்தது.
ஆகவே அவர்களை பாதுகாப்பாக மீட்டெடுத்து எம்மிடத்தில் ஒப்படைக்குமாறு நாம் கோரிக்கை விடுப்பதோடு கிளீர் சிறிலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் இவ்வாறு ஆட்கடத்தில் வலையமைப்புக்களையும் முழுமையாக அகற்றுவதற்கு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு வலியுறுத்துகின்றோம்.
எமது நீதியையும், நியாயத்தையும் பெற்றுத்தருவீர்கள் என்ற பெரும் எதிர்பார்ப்பு காணப்படுவதோடு விரைந்து இந்த விடயத்தில் அவதானம் செலுத்த வேண்டும் என்றும்” அவர்கள் தமது கடிதத்தில் கோரியுள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply