இன்று நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்படும் ஒதுக்கீட்டுச் சட்டமூலம்

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டுச் சட்டமூலம் இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. குறித்த சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பு எதிர்வரும் பெப்ரவரி மாதம் 17 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

அதன்படி, இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் பெப்ரவரி மாதம் 18 முதல் 25 ஆம் திகதி வரை நடைபெறுவதுடன், இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு 25 ஆம் திகதி பிற்பகல் நடைபெறும்.

பெப்ரவரி 27 முதல் மார்ச் 21 வரை குழுநிலை விவாதம் எனப்படும் மூன்றாம் வாசிப்பு மீதான விவாதம் நடைபெறவுள்ளது.

ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு மார்ச் 21 ஆம் திகதி பிற்பகல் நடைபெறும்.

இதற்கிடையில், உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு புதிய வேட்புமனுக்களை கோரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சிறப்பு ஏற்பாடுகள் சட்டமூலம் இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரால் சமர்ப்பிக்கப்படவுள்ள சட்டமூலம் சமீபத்தில் வர்த்தமானியில் வெளியிடப்பட்டது.

குறித்த சட்டமூலத்தை நிறைவேற்றிய பின்னர், உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான புதிய வேட்புமனுக்களை கோரும் அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு கிடைக்கும்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply