விமான நிலையத்திற்குள் சொகுசு பேருந்துகளுக்கு அனுமதி
187 வழித்தடத்தில் இயங்கும் கோட்டை – கட்டுநாயக்க சொகுசு பேருந்துகள் இன்று (10) முதல் விமான நிலைய புறப்பாடு முனையத்திற்குள் பிரவேசிப்பதற்கு விமான நிலைய மற்றும் விமான சேவை நிறுவனம் அனுமதி வழங்கியுள்ளது.
விமானப் பயணிகளின் வசதிக்காக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
சுமார் 6 ஆண்டுகளுக்குப் பிறகு கோட்டை – கட்டுநாயக்க பேருந்துகள், விமான நிலைய புறப்பாடு முனையத்திற்கு வர அனுமதிக்கப்படுகின்றன.
இருப்பினும், விமான நிலையத்தில் தரித்து நின்று இந்தப் பேருந்து சேவையை இயக்க வாய்ப்பு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களைத் தொடர்ந்து, பாதுகாப்புப் பிரிவின் வேண்டுகோளுக்கு இணங்க இந்தப் பேருந்து சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply