மர்மமான முறையில் கொல்லபட்ட பெண் : மயானத்துக்கு அருகில் சடலம் மீட்பு

அநுராதபுரம், மதவாச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கட்டுவெல மயானத்திற்கு அருகிலுள்ள குழியில் நேற்று மாலை பெண்ணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் 30 முதல் 40 வயதுக்குட்பட்ட பெண் என தெரிவிக்கப்படுகின்றது. இருப்பினும், அவரது அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

மேலாடை மற்றும் லெக்கின்ஸ் அணிந்திருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். பெண்ணின் உடலில் பல காயங்கள் காணப்பட்டுள்ள நிலையில், இதுவொரு கொலையென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நீதவானின் விசாரணையின் பின்னர் பிரேத பரிசோதனைக்காக உடல் அனுராதபுரம் மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர்களை கைது செய்வதற்காக மதவாச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply