பொரளையில் 12வது மாடியில் இருந்து விழுந்த 16 வயது சிறுமி உயிரிழப்பு

பொரளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில், அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து விழுந்து சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச் சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (10) இரவு இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

பொரளையில் உள்ள 24 மாடிகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பின் 12 ஆவது மாடியில் இருந்து விழுந்து 16 வயது சிறுமி படுகாயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

பொரளை, சர்பன்டைன் வீதியைச் சேர்ந்த 16 வயதுடைய சிறுமி ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சிறுமி மன அழுத்தம் காரணமாக சிறிது காலமாக வைத்திய சிகிச்சை பெற்று வந்ததாக உயிரிழந்த சிறுமியின் தாயார் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்த சிறுமி மாடியில் இருந்து குதித்தாரா அல்லது தவறி விழுந்தாரா என்பதை அறிய பொரளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply