உதயங்க வீரதுங்கவுக்கு 17 ஆம் திகதி வரை விளக்கமறியல்

ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவை எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நுகேகொட நீதவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். முன்னாள் இராஜதந்திரியான உதயங்க வீரதுங்க அவரது அயலவர் ஒருவரைத் தாக்கியமைக்காக வெள்ளிக்கிழமை (10) மிரிஹான பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டார்.

தலபத்பிட்டியவில் அயல் வீட்டில் வசிக்கும் 66 வயதுடைய நபர் ஒருவருடன் வியாழக்கிழமை (9) ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தை அடுத்து, முன்னாள் இராஜதந்திரி உதயங்க வீரதுங்க அவரைத் தாக்கியுள்ளார். அதனையடுத்துக் காயமடைந்த அவர் ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை (10) மிரிஹான பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட உதயங்க வீரதுங்க, நுகேகொட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டதை அடுத்து, அவரை எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவானால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply