வானிலை தொடர்பான எச்சரிக்கை
பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.கொழும்பிலிருந்து புத்தளம் வழியாக காங்கேசன்துறை வரையிலான கடற்கரைக்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 50-60 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, குறித்த கடல் பகுதிகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இது குறித்து மீனவர்கள் மற்றும் கடற்படையினர் அவதானம் செலுத்துமாறு வளிமண்டலவியல் திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply