சரத் பொன்சேகாவின் நேர்காணல் திரிபுபடுத்தப்படவில்லை
ஜெனரல் சரத் பொன்சேக்கா எனக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்த கருத்தைத் திருத்திக் கொள்ளுமாறு எவ்விதக் கோரிக்கைகளையும் விடுக்கவில்லையெனவும் தனது கருத்து திரிபுபடுத்தப்பட்டுள்ளதாக எனக்கு அறிவிக்கவில்லை எனவும் சண்டேலீடர் ஊடகவியலாளர் பெட்ரிக்கா ஜென்ஸ் தெரிவித்துள்ளார். சரத் பொன்சேக்கா தெரிவித்த கருத்துகளை தான் எவ்வித மாற்றங்களும் செய்யாது அவ்வாறே வெளியிட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், கொழும்பில் ஞாயிற்றுகிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய சரத் பொன்சேக்கா தான் தெரிவித்த கருத்து, தவறான வகையில் புரியும்படியாக ஊடகவியலாளரினால் எழுதப்பட்டிருந்ததாகவும், குறித்த அதனைத் திருத்திக் கொள்ளும் எனவும் தாம் எதிர்பார்ப்பதாகக் கூறியிருந்தார்.
இதேவேளை, இந்த ஊடகச் சந்திப்பில் கலந்துகொண்ட குறித்த ஊடகவியலாளரிடம் உரையாடிய சரத் பொன்சேக்கா தான் முன்னர் குறிப்பிட்ட கருத்து தவறாக குறிப்பிடப்பட்டதாக தெரிவிக்கவில்லை எனவும், எழுதப்பட்ட கருத்தினால் தனக்கு அரசியல் ரீதியாக பாதிப்பான நிலை உருவாகியிருப்பதாகவும் முடிந்தால் தனது கருத்தை பாதிப்பு ஏற்படாத வகையில் மாற்ற முடியுமா எனக் கேட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply