மாத்தறையில் நீரில் அடித்துச் செல்லப்பட்ட ரஷ்ய பிரஜை மீட்பு
மாத்தறை பொல்ஹேன கடற்கரையில் நீராடிக்கொண்டிருந்த வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் நீரோட்டத்தில் சிக்கி கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், பொலிஸ் உயிர்காப்புப் பிரிவினரால் மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (12) இடம்பெற்றது.
நீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிர் பிழைத்த வெளிநாட்டவர் 37 வயதான ரஷ்ய பிரஜை ஆவார்.
பொலிஸ் உயிர்காப்புப் பிரிவில் கடமையாற்றிய பொலிஸ் சார்ஜன்ட் பிரியதர்ஷ, பொலிஸ் கான்ஸ்டபிள்களான ஜயவீர மற்றும் ஜயசுந்தர ஆகியோர் இணைந்து இந்த நபரை காப்பாற்றியுள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply