வாகன விபத்தில் இருவர் பலி

நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் இருவர் உயிரிழந்தனர். வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அம்பலாந்துறை சவலக்கடை வீதியில் பிலாலி வெம்பு சந்திக்கு அருகில், வெல்லாவெளியிலிருந்து காந்திபுரம் நோக்கிச் பயணித்த உழவு இயந்திரம் ஒன்று, எதிர் திசையில் இருந்து வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி நேற்று (12) மாலை விபத்து ஏற்பட்டது.

விபத்தில் பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிள் செலுத்துனர் களுவாஞ்சிகுடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், உயிரிழந்தார்.

விபத்தில் உயிரிழந்தவர் மண்டூர், சங்கர்புரத்தைச் சேர்ந்த 43 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சடலம் களுவாஞ்சிகுடி மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

விபத்தையடுத்து உழவு இயந்திரத்தின் சாரதி தப்பி ஓடிய நிலையில், வாகனத்தை பொலிஸார் பொறுப்பேற்றனர்.

பின்னர் தப்பிச் சென்றிருந்த சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெல்லாவெளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையில், பின்னவல பொலிஸ் பிரிவின் கொழும்பு – மட்டக்களப்பு பிரதான வீதியில் அமுபிட்டிய பகுதியில் பாதுக்க திசையிலிருந்து சீலகம நோக்கி பயணித்த டிப்பர் வாகனத்தை சாரதியால் கட்டுப்படுத்த முடியாமல் வீதியை விட்டு விலகி கொங்ரீட் தூணில் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் பலத்த காயமடைந்த டிப்பர் வாகனத்தின் சாரதி, பலாங்கொடை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் பெலிஹுல்ஓயாவைச் சேர்ந்த 49 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

சடலம் பலாங்கொடை மருத்துவமனை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பின்னவல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply