காத்தான்குடியிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பஸ் விபத்து : 14 பேர் காயம்
சேருநுவர பொலிஸ் பிரிவில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 14 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சேருநுவர – கந்தளாய் வீதியில் சேருநுவர கல்லாறு இராணுவ முகாமுக்கு முன்பாக உள்ள வளைவுக்கு அருகில் இன்று திங்கட்கிழமை (20) காலை குறித்த பஸ் விபத்து இடம்பெற்றுள்ளது.
காத்தான்குடியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பஸ் ஒன்றே விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நிலவும் சீரற்ற வானிலை காரணமாக குறித்த பஸ் வீதியை விட்டு விலகி வீதியின் ஓரத்தில் இருந்த மரத்தடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
பஸ் விபத்திற்குள்ளாகும் போது பஸ்ஸில் 49 பயணிகள் பயணித்துள்ளதுடன், விபத்து காரணமாக காயமடைந்த பஸ் சாரதி, பஸ் நடத்துடனர் உட்பட 14 பேர் சிகிச்சைக்காக சேருநுவர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதும், சாரதியும் 9 பயணிகளும் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
பஸ் சாரதியின் கவனக்குறைவே விபத்துக்கான காரணம் என பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சேருநுவர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply