மர்மமான முறையில் உயிரிழந்த நபரின் சடலம் மீட்பு

எஹலியகொட – தொரணகொட பிரதேசத்தில் உள்ள மசாஜ் நிலையமொன்றின் குளியலறையில் மர்மமான முறையில் நபரொருவர் உயிரிழந்துள்ளார். இது தொடர்பில் நேற்று (19) எஹலியகொட பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

சம்பவத்தில் பத்பேரிய, பரகடுவ பகுதியைச் சேர்ந்த 57 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார்.

சடலம் தற்போது நீதவான் விசாரணைகளுக்காக அவிசாவளை மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை எஹலியகொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply