கிழக்கில் கடும் மழை காரணமாக சுமார் மூன்று லட்சம் பேர் இடம்பெயர்வு; பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்கு கருணா ஏற்பாடு

கிழக்கு மாகாணத்தில் கடந்த 48 மணி நேரத்தில் பெய்த கடும் மழை காரணமாக சுமார் மூன்று லட்சம் பேர் இடம்பெயர்ந்திருப்பதாகவும், இடியுடன் கூடிய மழை காரணமாக மின்னல் தாக்கியதிலும், வெள்ள அனர்த்தத்திலுமாக மூன்று பேர் இறந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி தேவையாக சமைத்த உணவுகளையும், தற்காலிக குடியிருப்புக்களையும் வழங்க அமைச்சர் கருணா அம்மான் நடவடிக்கை எடுத்துள்ளார்.

வெள்ளத்தால் மட்டு, திருகோணமலை மாவட்டத்தில் பெரிதும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்காக அமைச்சர் கருணா அம்மான் அவசரமாக அமைச்சர் அமீர் அலியுடன் கலந்தாலோசித்தார். அம்மக்களுக்கு தற்காலிக தங்குமிடவசதிகள், சமைத்த உணவுகளை வழங்குமாறும் கேட்டுள்ளார்..

அம்பாறை, பொரகம பிரதேசத்தில் 17 யுவதியொருவர் மின்னல் தாக்கி பலியாகியுள்ளார். அத்துடன், அம்பாறை நகரில் வீடொன்றின் சுவர் இடிந்து விழுந்ததில் யுவதியொருவர் கொல்லப்பட்டுள்ளார். வங்களா விரிகுடாவில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழமுக்கம் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று அதிகாலை மழை வீழ்ச்சி ஏற்பட்டது. 241.01 மி.மீ. மழை பெய்துள்ளது. இந்த மழை காரணமாக அம்பாறை மாவட்டத்தில் அரச அலுவலகங்கள், வீடுகள், தாழ் நிலங்கள் என்பன நீரில் மூழ்கியுள்ளன.

மின்கம்பங்கள் உடைந்து வீழ்ந்துள்ளதால், மக்களின் இயல்புவாழ்க்கைப் பாதிக்கப்பட்டுள்ளதாக ஊடகவியலாளர்கள் தெரிவித்துள்ளனர். வடக்கு, கிழக்கு மேற்கு, கிழக்கு, வடமேல், வடமத்திய மாகாணங்களில் காற்றுடன் கூடிய பலத்த மழைய பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் வாகரை உள்ளிட்ட தாழ்நிலப் பிரதேசங்கள் நீரில் மூழ்கியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

திருகோணமலை, கிளிநொச்சி, வவுனியா, அம்பாறை, நுவரெலியா, பதுளை மாவட்டங்களிலும் பாரிய மழை வீழ்ச்சி ஏற்பட்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ மையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply