அமெரிக்காவின் 47ஆவது ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் பதவியேற்பு
அமெரிக்காவின் 47ஆவது ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 5ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் தேர்தல் நடைபெற்றிருந்த நிலையில் அவர் இப்போது ஜனாதிபதியாக பதவியேற்றுள்ளார்.
இதனடிப்படையில், தலைநகர் வாஷிங்டனில் உள்ள கேபிடோலின் உள்ளரங்கில் பதவியேற்பு விழா வெகு விமரிசையாக நடைபெற்றிந்தமையும் சுட்டிக்காட்டத்தக்கது.
பதவியேற்பு விழாவில் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதிகள், உலக தலைவர்கள், தொழிலதிபர்கள் மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த பிரபலங்களும் கலந்து கொண்டுள்ளனர்.
டிரம்பின் பதவியேற்பு விழாவில் இந்தியாவின் சார்பில் மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்றுள்ளார்.
டிரம்புக்கு ரஷ்ய ஜனாதிபதி புதின் வாழ்த்து தெரிவித்துள்ளார். பதவியேற்ற பின்னர் அடுத்த 4 ஆண்டுகளுக்கான தனது திட்டங்கள் குறித்து டிரம்ப் தனது முதல் உரையை ஆற்றுகிறார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply