சிட்னியில் யூத சிறுவர் பராமரிப்பு நிலையத்தைதீயிட்டு கொளுத்தமுயற்சி
அவுஸ்திரேலியாவின் சிட்னியில் குழந்தைகள் பராமரிப்பு நிலையத்தை தீ மூட்டி எரிகக முயன்ற சம்பவத்திற்கு யூதர்கள் எதிர்ப்பே காரணம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சிட்னியின் கிழக்கில் யூதவழிபாட்டுதலம் பாடசாலைகளிற்கு நடுவில் அமைந்திருந்த சிறுவர் பராமரிப்பு நிலையத்தை சிலர் தீயிட்டு எரிக்க முயற்சித்துள்ளனர்.
சிறுவர் பராமரிப்பு நிலையம் கடும் சேதத்திற்குள்ளாகியுள்ளது எனினும் எவரும் பாதிக்கப்படவில்லை.
குறிப்பிட்ட கட்டிடம் மீது யூதஎதிர்ப்பு வாசகங்களை இனந்தெரியாதவர்கள் எழுதிவிட்டு சென்றுள்ளனர்.
சிட்னியில் ஒருவாரகாலத்திற்கு யூதர்களிற்கு சொந்தமான கட்டிடங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இரண்டாவது தாக்குதல் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை இந்த தாக்குதல் தொடர்பில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
2023 ஒக்டோபர் ஏழாம் திகதிக்கு பின்னர் அவுஸ்திரேலியாவில் யூத எதிர்ப்புணர்வு சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply