மட்டக்களப்பில் சீரற்ற காலநிலையால் ஆயிரக்கணக்கானோர் பாதிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தினால் 3737 குடும்பங்களைச் சேர்ந்த 11,971 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 921 பேர் 9 முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர்.சீரற்ற காலநிலையால் 17 வீடுகள் பகுதியளவில் பாதிக்கப்பட்டுள்ளதுடன் பல ஆயிரக்கணக்காண ஏக்கர் வேளாண்மை நீரில் மூழ்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் மாவட்டத்திலுள்ள சில பிரதேசங்களுக்கும் வெளிமாவட்டத்துக்குமான போக்குவரத்து மற்றும் தொடருந்து சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.

கடந்த 18ஆம் திகதி ஆரம்பித்த கன மழையினால் மாவட்டத்திலுள்ள குளங்கள் யாவும் நிரம்பியதையடுத்து, வான்கதவுகள் திறக்கப்பட்டு வயல் நிலங்கள் வெள்ள நீரில் மூழ்கியது.

மட்டக்களப்பில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மக்கள் தமது அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துவருகின்றனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply