வாழைச்சேனையில் சகோதரனை குத்தி க்கொன்ற சகோதரன் தலைமறைவு

கத்திக் குத்துக்குக்கு இலக்காகிய நிலையில் நபர் ஒருவர் மரணமடைந்துள்ளார். இந்தச் சம்பவம் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிறைந்துறைச்சேனை பகுதியில் புதன்கிழமை (22) காலை இடம்பெற்றுள்ளது.

உடன்பிறந்த சகோதரர்களுக்கிடையில் இடம்பெற்ற முரண்பாடே இச் சம்பவத்துக்கு காரணம் என விசாரணையின் போது தெரிய வந்துள்ளது.இதில், தம்பிக்காரன் தனது 43 வயதுடைய சகோதரனை குத்திக் கொலை செய்துள்ளார். கத்திக் குத்துக்கு இலக்கான நபரின் உடல் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சகோதரனை குத்திக் கொன்ற சகோதரன் தலைமறைவாகியுள்ளார். அவரை கைது செய்ய வாழைச்சேனை பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply