அமெரிக்காவில் இந்த வருடத்தில் 133 வங்கிகள் மூடப்பட்டன

அமெரிக்காவில் மாதம் 11 வங்கிகள் நிதி சீர்குலைவு காரணமாக நட்டமடைந்து வருகின்றன. இதுவரை இந்த ஆண்டு 133 வங்கிகள் காலியாகியுள்ளன. கடந்த ஆண்டைவிட இது ஐந்து மடங்கு அதிகமாகும். பொருளாதார சீர்குலைவால் பாதிக்கப்பட்ட அமெரிக்க வங்கிகள் தொடர்ந்து நட்டமடைந்து வருகின்றன. சராசரியாக மாதத்திற்கு 11 பெரிய மற்றும் சிறிய வங்கிகள் நட்டமடைந்து வருகின்றன. கடந்த ஆண்டு மொத்தம் 25 வங்கிகளே நட்டமடைந்தன. ஆனால், இந்த ஆண்டு இதுவரை 133 வங்கிகள் நட்டத்துக்குள்ளாகியுள்ளன.

கடந்த 18 ஆண்டுகளில் அதிகளவில் இந்த ஆண்டிலேயே வங்கிகள் நட்டமடைந்துள்ளன. 1992ம் ஆண்டு சேமிப்பு- கடன் நெருக்கடி காரணமாக 181 வங்கிகள் நட்டமடைந்தமை குறிப்பிடத்தக்கது. தற்போது ரிபப்ளிக் பெடரல் வங்கி, வேலி கெபிடல் பேங்க், சொலூசன்ஸ் வங்கி ஆகியவை மூடப்பட்டுள்ளன. டிசெம்பர் 11ம் திகதி இவை கடையை மூடிவிட்டன. கடந்த ஆண்டு லேஹ்மன் பிரதர்ஸ் வங்கி நட்டமடைந்தது. இதைத் தொடர்ந்து 25 வங்கிகள் மூடப்பட்டன. இந்த ஆண்டு நிலைமை இன்னும் மோசமாகி 133 வங்கிகள் மூடப்பட்டுள்ளன. அதாவது மாதந்தோறும் சராசரியாக 11 வங்கிகள் மூடப்பட்டுள்ளன. மொத்தம் 148 வங்கிகள் மூடுவிழா கண்டுள்ளன. இவற்றால் அமெரிக்க காப்பீட்டுத்துறைக்கு ஏற்பட்டுள்ள இழப்பு 10 ஆயிரம் கோடி டொலர் என்கின்றனர் அதிகாரிகள்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply