இலங்கைக்கு இந்தியா கடும் கண்டனம்

தமிழகம், காரைக்கால் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இந்நிலையில், துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

நெடுந்தீவுக்கு அருகேயுள்ள கடற்பரப்பில் நேற்று அதிகாலை இந்திய மீனவர்கள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் அவர்களை கைது செய்ய முயன்றபோது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

இந்தப் துப்பாக்கிச் சூட்டில் மீனவர்கள் காயம் அடைந்தனர். காயமடைந்த மீனவர்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக வெளியுறவு அமைச்சகம் தரப்பில், ‘பாக் ஜலசந்தியில் உள்ள டெல்ஃப்ட் தீவுக்கு அருகே இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச் சூடு நடத்தியது.

இதில், இருவர் படுகாயமடைந்தனர், மேலும் மூவர் காயமடைந்தனர். 13 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. படுகாயமடைந்த இரண்டு மீனவர்களும் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர், அங்கு இந்திய தூதரக அதிகாரிகள் அவர்களுக்கு உதவி வழங்க சென்றனர்.

இலங்கை கடற்படையின் துப்பாக்கிச் சூட்டுக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. வெளியுறவு அமைச்சகம், டெல்லியில் உள்ள இலங்கையின் (பொறுப்பு) தூதரை அழைத்து எதிர்ப்பை பதிவு செய்தது. கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் மூலமும் இந்தப் பிரச்சினையை இலங்கை அதிகாரிகளிடம் எழுப்பியது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள கட்டுரை


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply