முல்லேரியாவில் 02 கிலோ ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது
முல்லேரியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட உடமுல்ல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று செவ்வாய்க்கிழமை (28) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினர் தெரிவித்தனர்.
கொழும்பு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் முல்லேரியா பிரதேசத்தில் வசிக்கும் 41 வயதுடையவர் ஆவார்.
சந்தேக நபரிடமிருந்து 02 கிலோ 218 கிராம் ஹெரோயின் போதைப்பொருள், போதைப்பொருள் விற்பனை மூலம் சம்பாதித்தாக கூறப்படும் 6 இலட்சத்து 67 ஆயிரம் ரூபா பணம், 03 கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் கார் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர், வெளிநாட்டில் உள்ள பிரபல போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் தலைமையில் பல்வேறு பிரதேசங்களில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொழும்பு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply