தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவர் மாவை சேனாதிராஜா காலமானார்
யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இருந்த இலங்கை தமிழரசு கட்சியின் முன்னாள் தலைவர் மாவை சேனாதிராஜா இன்று (29) காலமானார்.குளியலறையில் கால் தடக்கி விழுந்ததால் தலையில் உள்ள நரம்பு ஒன்று பாதிக்கப்பட்ட நிலையில் மாவை சேனாதிராஜா யாழ்ப்பாணம் போதனை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று இரவு காலமானார்.
1942 ஆண்டு ஒக்டோபர் மாதம் 27 ஆம் திகதி பிறந்த மாவை சேனாதிராஜா தனது 82 வது வயதிலேயே காலமானார்.இறுதிக் கிரியைகள் தொடர்பான விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply