துப்பாக்கிச்சூட்டில் உயிர் தப்பிய நபர்கள்
கொஸ்கொட பொலிஸ் பிரிவின் மஹைந்துருவ பகுதியில் உள்ள ஒரு வீட்டின் முன் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இன்று (30) காலை துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
119 என்ற எண்ணுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகளைத் தொடங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூட்டுக்குப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி செயல்படாததால் உயிர் சேதமோ அல்லது சொத்து சேதமோ ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த துப்பாக்கிச்சூட்டிற்கு பயன்படுத்தபட்டதாக சந்தேகிக்கப்படும் பிஸ்டல் வகை துப்பாக்கி ஒன்று வீட்டின் அருகே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும் துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
சந்தேக நபர்களைக் கைது செய்வதற்காக கொஸ்கொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply