23 வேட்புமனுக்களில் 1 நிராகரிக்கப்பட்டது
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தமது கட்டுப்பணத்தை செலுத்தும் காலஎல்லை நேற்று நண்பகல் 12 மணியுடன் நிறைவடைந்துள்ளது. இந்த காலப்பகுதியில் அரசியல் கட்சிகளை சேர்ந்த 18 பேரும் சுயேட்சைக்குழுக்களை சேர்ந்த 5 பேருமாக மொத்தமாக 23 பேர் இம்முறை தேர்தலில் போட்டியிடுவதற்கு கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனர். வேட்பு மனுக்கள் இன்று காலை 9 மணிமுதல் 11. 30 மணிவரை ஏற்றுக் கொள்ளப்பட்டது. 23 வேட்டுமனுக்களில் இலங்கை முற்போக்கு முன்னணியை (Sri Lanka Pragathisheeli Peramuna)சேர்ந்த நெல்சன் பெரேராவின் வேட்டுமனு நிராகரிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையாளர் தயானந்த திஸநாயக்க அறிவித்துள்ளார்.
2010 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26 ஆம் திகதி நடைபெறவிருக்கின்ற ஆறாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல் 2008 ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பின் பிரகாரமே நடைபெறும் இத்தேர்தலில் 1 கோடியே 40 இலட்சத்து 88 ஆயிரத்து 500 பேர் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளனர்.
2005ம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஐந்தாவது ஜனாதிபதி தேர்தலில் 13 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். 2010ம் ஆண்டு ஜனவரி 26ம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் 22 பேர் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply