இலங்கை தமிழரசு கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜாவின் இறுதி சடங்கு குறித்த அறிவிப்பு
இலங்கை தமிழரசு கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தமது 82வது வயதில் நேற்று (புதன்கிழமை) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். காலமாகியுள்ளார்
குளியலறையில் கால் தடுக்கி கீழே விழுந்ததால் தலையிலுள்ள நரம்பொன்று பாதிக்கப்பட்ட நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு காலமானார்.
சேனாதிராஜாவின் உடலை அவரது குடும்பத்தினரின் அனுமதியுடன் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் பொறுப்பேற்றுள்ளதோடு, எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு அவரது இறுதிக் கிரியைகள் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply