மாவிட்டபுரத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள மூத்த தலைவர் மாவை சேனாதிராஜாவின் பூதவுடல்
மாவை சேனாதிராசாவின் பூதவுடல் , யாழ்ப்பாணம் மாவிட்டபுரத்தில் அவரது இல்லத்தில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.இலங்கை தமிழரசு கட்சியின் மூத்த தலைவரும், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான மாவை சேனாதிராசா (வயது 82) வைத்திய சாலையில் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் புதன்கிழமை இரவு காலமானார்.
கடந்த செவ்வாய்க்கிழமை தனது வீட்டில் தவறி விழுந்த நிலையில் யாழ். போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றைய தினம் புதன்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இறுதி கிரியைகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள நிலையில் , அவரது வீட்டில் பூதவுடல் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
அரசியல் தலைவர்கள் , பொது அமைப்புக்களை சேர்ந்தவர்கள் பொதுமக்கள் என பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply