திசைநாயகத்தின் பிணை மனுவுக்கு சட்டமா அதிபர் ஆட்சேபனையில்லை
ஜெயப்பிரகாஷ் சிற்றம்பலம் திசைநாயகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவுக்கு சட்டமா அதிபர் எவ்வித ஆட்சேபனையையும் தெரிவிக்கமாட்டார் என உயர் நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த வழக்கை விசாரணை செய்ய திகதி ஒன்றை நிர்ணயிக்குமாறு உயர் நீதிமன்றம் பதிவாளருக்கு உத்தரவிட்டுள்ளது.
இனங்களுக்கு இடையில் குரோதங்களை ஏற்படுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிட்டார் என்றும் பயங்கரவாதத்திற்கு துணை போனார் என்றும் குற்றம் சுமத்தியே காவல்துறையினர் ஜெயப்பிரகாஷ் சிற்றம்பலம் திசைநாயகம் மீது வழக்கை தாக்கல் செய்திருந்தனர். பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் அவருக்கு 20 வருட சிறைத்தண்டனையை மேல் நீதிமன்றம் வழங்கியிருந்தது. ஆனால், திசைநாயகம் `நியதிகளுக்கு அப்பாற்பட்ட கைதி` என சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply