இலங்கைக்கு எதிரான ஜீ.எஸ்.பியை பயன்படுத்துவது நியாயமற்றது
ஜீ.எஸ்.பி. பிளஸ் சலுகையை ஐரோப்பிய நாடுகள் இலங்கைக்கு எதிராக ஒரு ஆயுதமாக பயன்படுத்துவது நியாயமற்றதென அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் நேற்று தெரிவித்தார்.
ஜீ.எஸ்.பி. விவகாரம் குறித்து ஐரோப்பிய நாடுகள் ஒருதலைப்பட்சமாக நடந்து கொள்கின்றன. இந்தச் சலுகையை இலங்கைக்கு வழங்குவதில்லை என ஐரோப்பிய ஒன்றியம் சிபாரிகளை செய் துள்ளது. இது இறுதியான தீர்மானமும் அல்ல. எனினும், இதற்காக இலங்கை இறைஞ்சப் போவதில்லை.
மாறாக சட்ட நடவடிக்கை எடுப்பது பற்றியும், மாற்று வழிகள் எடுப்பது பற்றியும் சிந்தித்து வருகிறது எனவும் அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார்.
ஜீ.எஸ்.பி. பிளஸ் என்பது எல்லா நாடுகளுக்கும் கிடைக்கும் சலுகை இதனை இலங்கைக்கு மட்டுமே வழங்காமல் விடுவது என்பது பக்கச் சார்பாக நடந்து கொள்வதாக தெரிகிறது.
ஐரோப்பிய நாடுகளுக்கு எமது அரசியல் பிடிக்கவில்லை. எம்மால் யுத்தம் செய்ய முடியாது. பிரச்சினைக்கு தீர்வுகாண முடியாது என்றெல்லாம் கடந்த காலங்களில் தெரிவித்திருந்தனர்.
குறிப்பாக மக்களை மீளக்குடியமர்த்தும் விடயத்தில் திருப்திப்படுமளவுக்கு இலங்கை செயற்பட்டுள்ளது என இலங்கை வந்திருந்த ரொபர்ட் ஓ. பிளேக், மற்றும் ஜோன் ஹோம்ஸ் ஆகியோர் அந்தந்த பகுதிகளுக்கு நேரடியாகவே சென்று பார்த்தபின்னர் கூறியிருக்கின்றனர் என்றும் அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார்.
அமைச்சர் டளஸ் அழகப்பெரும:
ஜீ.எஸ்.பி. சலுகை எமக்கு கிடைக்காவிடின் இலங்கைக்கு கிடைக்க வேண்டிய 125 மில்லியன் அமெரிக்க டெலர்கள் கிடைக்காமல் போகலாம். எனினும் இதனை ஈடுசெய்வது குறித்து அரசு ஆலோசித்து வருகிறது. இவற்றுக்கு முகம் கொடுக்கக் கூடிய நிலையில் எமது அரசு இருக்கிறது. ஜீ. எஸ். பி. சலுகை இழப்பினால் ஆடை உற்பத்தி தொழில் மற்றும் அதில் தொழில்புரியும் எமது இளைஞர் யுவதிகளின் தொழில் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக தேவையான நட வடிக்கைகளை எடுக்கவும் அரசு ஆயத்தமாக இருக்கிறது.
அத்துடன் ஐரோப்பிய நாடுகள் அனைத்துமே இலங்கைக்கு எதிரானவர்களும் அல்ல. என்றும் அமைச்சர் டளஸ் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply