வெளிநாட்டில் கல்வி கற்கச் சென்ற இந்திய மாணவர் மாயம்: கிடைத்துள்ள துயரச் செய்தி
நெதர்லாந்தில் கல்வி கற்கச் சென்ற இந்திய மாணவர் ஒருவர் மாயமான நிலையில், அவரைக் குறித்த துயரச் செய்தி ஒன்று கிடைத்துள்ளது. இந்திய மாணவரான தேவேஷ் (Devesh Bapat, 23), நெதர்லாந்திலுள்ள Eindhoven University of Technology என்னும் கல்வி நிறுவனத்தில் கல்வி பயின்றுவந்துள்ளார்.
இந்நிலையில், சென்ற மாதம், அதாவது, பிப்ரவரி மாதம் 1ஆம் திகதி காணாமல் போனார் தேவேஷ்.பொலிசார் அவரைத் தீவிரமாகத் தேடிவந்த நிலையில், அவர் ஜேர்மனி சென்றது தெரியவந்துள்ளது. ஆனால், ஜேர்மனியின் தேவேஷின் உயிரற்ற உடல்தான் கிடைத்துள்ளது. மேலும், அவரது மரணத்தின் பின்னணியில் குற்றச்செயல்கள் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை என்றும் பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply