பொலிஸ் அதிகாரியை தாக்கிய வெலே சுதாவின் சகோதரன்

போதைப்பொருள் சோதனைக்குச் சென்ற பொலிஸ் அதிகாரி ஒருவர் மீது சந்தேக நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்குதல் நடத்தியுள்ளார். இதில் காயமடைந்த பொலிஸ் அதிகாரி தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவத்தில் கல்கிஸ்ஸை பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த அதிகாரியே காயமடைந்தார்.

படேவிட காவல் மனையில் பணியமர்த்தப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் அந்த காவல் மனையின் பொறுப்பதிகாரியுடன் இன்று (15) மாலை படேவிட 3வது கட்டப்பகுதிக்கு சோதனைக்குச் சென்றிருந்தார்.

இதன்போது போதைப்பொருள் வைத்திருந்ததாக சந்தேக நபரை கைது செய்ய முயன்றபோது, ​​சந்தேக நபருடன் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து சந்தேகநபர் கூரிய ஆயுதத்தால் அதிகாரியின் வயிறு மற்றும் முழங்கை பகுதியில் தாக்கியுள்ளார்.

சம்பவத்தின் பின்னர் சந்தேக நபர் தப்பிச் சென்றுள்ளதுடன், சிறு காயங்களுக்கு உள்ளான அதிகாரியை களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர், தற்போது தண்டனை அனுபவித்து வரும் பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரரான வெலே சுதா என்ற சமந்த குமாரவின் சகோதரர் என தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply