காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை மீள்திறப்பது ஒத்திவைப்பு

பாதுகாப்புக் காரணங்களுக்காக யாழ்ப்பாணம் காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையைத் திறக்கும் பணிகள் மேலும் இரண்டு மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது. தற்பொழுது வடபகுதியில் நடக்கும் மோதல்கள் காரணமாக 100 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியில் காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையைத் திறக்கும் திட்டம் எதிர்வரும் பெப்ரவரி மாதம்வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளளதாக நம்பகரமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

“தற்பொழுது அங்கு காணப்படும் நிலையில் சீமெந்து நிறுவனம் தாகுதல் இலக்காக மாறுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன” என அந்த வட்டாரங்கள் கூறின. தொழிற்சாலைகள் அமைச்சின் உதவியுடன், இலங்கை சீமெந்து லிமிட்டடின் கீழ் காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை அபிவிருத்தி செய்யுத் செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அதனை டிசம்பர் மாதத்தில் திறப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போதும் பெப்ரவரி மாதம்வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை மீண்டும் புனரமைக்கும் பணிகள் இந்திய நிறுவனமொன்றிடம் ஒப்படைக்கப்படவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருந்தன. எனினும், இந்தியாவின் ரம்கோ நிறுவனம், இத்தாலி சீமெந்து நிறுவனம், மற்றும் பாகிஸ்தான் சீமெந்து நிறுவனம் ஆகியவற்றிடமிருந்து தாம் கேள்விப் பத்திரங்களைப் பேற்றிருந்தபோதும், எந்த நிறுவனத்திடம் அதனை ஒப்படைப்பது என்பது பற்றி இதுவரை தீர்மானிக்கப்படவில்லையென அரசாங்கத் தரப்பில் கூறப்படுகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply