மனித உரிமை பேரவையிலிருந்து இலங்கை வெளியேறவேண்டும்: ரணில்
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையிலிருந்து இலங்கை வெளியேறவேண்டும் என தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தின் ஆசிய கிளை குறித்து விசாரணைகளை கோரவேண்டும் என தெரிவித்துள்ளார்.
இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதி தருணங்களில் 40,000 பேர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுவதை நிராகரித்துள்ள அவர் நல்லாட்சிகாலத்தில் உருவாக்கப்பட்ட உண்மை நல்லிணக்க ஆணைக்குழுவை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து அதனை நிறைவேற்றி விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
பேட்டியொன்றில் இதனை தெரிவித்துள்ள அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்துடன் உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திட்டார்.
அந்த உடன்படிக்கையை நாங்கள் மதிக்கவேண்டும் என்பதே எனது கருத்து.
காணாமல்போனவர்கள் உட்பட பல விடயங்களிற்கு தீர்வை காண்பதற்கான நடவடிக்கைகளை நாங்கள் ஆரம்பித்தோம்,அவை மிகவும் மெதுவாகத்தான் செயற்பட்டன ஆனாலும் நாங்கள் ஆரம்பித்தோம்.
இப்போது எஞ்சியிருக்கின்ற விடயம் விசாரணைகள் தொடர்பானது, இந்தியா உட்பட பல நாடுகள் இதனை இலங்கை நீதிபதிகளே முன்னெடுக்கவேண்டும் என வெளிநாட்டவர்கள் இல்லை என விரும்புகின்றன.
ஆனால் நாங்கள் கண்காணிப்பாளர்களை ஏற்க தயார் என தெரிவித்தோம்.
நாங்கள்,மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்தின் போது ஆணைக்குழு தொடர்பான புதிய நகல்வடிவமொன்றை உருவாக்கினோம்,ஜப்பான் தென்கொரியாவின் உதவியுடன் புதியதொன்றை உருவாக்கினோம்,இதுவே உண்மை நல்லிணக்க ஆணைக்குழு.அதனை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றவேண்டும் செயற்படஆரம்பிக்கவேண்டும் .
இந்த ஆணைக்குழு அனைத்து தேவைகளையும் நிறைவேற்றும், விசாரணைகளை இந்த ஆணைக்குழு முன்னெடுக்கலாம் அதன் பின்னர் அடுத்தகட்டம் குறித்து சட்டமா அதிபர் தீர்மானிப்பார்.
இதன் பின்னணி என்ன? நாங்கள் செய்திருக்கின்றோம் – ஆனால்மேற்குலகம் ஐரோப்பாகஎங்களை கண்டிக்கின்றது விமர்சிக்கின்றது, ஏன்?
யுத்தம் நடந்தது 40 பேர் கொல்லப்படவில்லை, காசாவில் 40000 பேர் கொல்லப்ட்டனர்,அங்கு சனத்தொகை என்பது பல மில்லியன்.
ஆனால் இங்கு மில்லியன் கணக்கான மக்கள் இருந்திருக்கவேண்டும் வடக்கின் சனத்தொகை மில்லியன் கணக்கில் இல்லை.
மோதலின் நடுவில் சிக்கி பலர் இறந்துள்ளனர் அதனை நான் ஏற்றுக்கொள்கின்றேன் ஆனால் அது சொல்லப்படுகின்ற எண்ணிக்கை அளவிற்கு இல்லை.
பிரான்சிஸ் ஹரிசனிடம் நான் கேள்வி எழுப்பியவேளை அவர் தான் 40,000 பேர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கவில்லை என்றார்.
இதன் காரணமாக நாங்கள் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளோம் – ஜனநாயகத்தை நீண்டகாலமாக பின்பற்றி வரும் ஜனநாயகநாடு இலங்கை என்பதை நீங்கள் நினைவில் கொள்ளவேண்டும்.
நாங்கள் யுத்தத்தை எதிர்கொண்டோம், நாங்கள் தேர்தல்களை நடத்தினோம்,நாங்கள் எங்கள் தலைவர்கள் சிலரை இழந்தோம், சில வேட்பாளர்களை இழந்தோம்,
1988 முதல் நாங்கள் அனைத்து தேர்தல்களையும் நடத்தியுள்ளோம் அதற்கு நீங்கள் எங்களை பாராட்டவேண்டும்.
எங்களிற்கு எதிராக ஆயுதம் ஏந்தியவர்கள் தமிழர்கள் ஜேவிபியாக இருக்கலாம் அவர்கள் நாடாளுமன்றத்தில் இருக்கின்றனர், அரசாங்கத்தில் உள்ளனர்.ஜனாதிபதியாக உள்ளனர்- வேறு எந்த நாட்டினால் இவ்வாறானதொரு வரலாறு குறித்து பெருமிதம் கொள்ள முடியும்.
நாங்கள் வழங்கிய எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவேண்டும்,தமிழ் மக்கள் தங்களிற்கு நீதி கிடைத்ததாக உணரும் நிலையேற்படவேண்டும். எதுவும் செய்யவேண்டாம் என தெரிவிப்பவர்களிற்கு எதிரானவன் நான்.
ஆனால் அதேவேளை மனித உரிமை பேரவையிலிருந்து வெளியேறுங்கள் என நான் தெரிவிப்பேன்.அதற்கான நேரம் இதுதான். டிரம்ப் வெளியேறிவிட்டார், நீங்கள் உங்களால் முடியாது என்கின்றீர்கள்.
இல்லாவிட்டால் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தின் ஆசிய கிளை குறித்து விசாரணையை நாங்கள் கோரவேண்டும்.
ஐக்கிய நாடுகள் நாயகத்திற்கான எங்களின் வாக்குறுதியை நாங்கள் நிறைவேற்றப்போகின்றோம் என்றால் நாங்கள் கடுமையான நிலைப்பாட்டை எடுக்கவேண்டும்.
அதனை நிறைவேற்றாவிட்டால் நாங்கள் நெருக்கடியான நிலையை சந்திப்போம் . அனைத்து கட்சிகளும் இணைந்து எங்களின் காலத்தில் உருவாக்கப்பட்ட உண்மை நல்லிணக்க ஆணைக்குழு குறித்த யோசனையை நாடாளுமன்றத்தில் சமர்பித்து நிறைவேற்றவேண்டும். நான் அதற்கு ஆதரவை வழங்குவேன்.
அதன் பின்னர் நாங்களும் முன்னோக்கி செல்கின்றோம் என ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கு தெரிவிக்கவேண்டும்.
டிரம்பினால் செய்யமுடியும் என்றால் ஏன் எங்களால்முடியாது? மனித உரிமை பேரவை ஒரு சிலர் மீது மாத்திரம் பாயமுடியாது,
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply