ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் வேட்புமனுகள் நிராகரிப்பு நீதிமன்றத்தை நாட முடிவு : சுரேஷ் பிரேமச்சந்திரன்
தமது வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தொடருவோம் என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியினர் தெரிவித்துள்ளனர். யாழ் . மாவட்டத்தில் சில சபைகளில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
இந்த விடயம் தொடர்பில் அந்தக் கட்சியின் சார்பில் ஊடகங்களுக்கு சுரேஷ் பிரேமச்சந்திரன் கருத்து தெரிவிக்கும் போது இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
யாழ் . மாவட்டத்தில் உள்ள இரண்டு சபைகளை தவிர ஏனைய 15 சபைகளுக்குமான வேட்பு மனுக்களை நாம் கையளித்திருந்தோம். அவற்றில் பல சபைகளில் எமது வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன
வடக்கு கிழக்கில் எம்மை ஓரம் கட்டி விட்டு ஆளும் கட்சி உள்ளிட்ட சில கட்சிகளை மாத்திரம் தேர்தலில் போட்டியிட வைக்கும் செயற்பாட்டை தேர்தல் திணைக்களம் செய்துள்ளதாகவே நாம் சந்தேகிக்கின்றோம்.
இது தொடர்பில் நாம் நீதிமன்றில் வழக்கு தொடர்பதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்துள்ளோம் என அவர் மேலும் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply