சீனாவின் K-18 விமானங்களை பரிசோதனை செய்கிறது இலங்கை

இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான அனைத்து K-8 ஜெட் விமானங்களிலும் நிலையான ஆய்வு நடத்தப்படும் என்று பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. இதுகுறித்து பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜெயசேகர தெரிவிக்கையில்

விமான விபத்து குறித்து ஏழு பேர் கொண்ட குழு விசாரணை நடத்தி வருகிறது. தேவை ஏற்பட்டால், வெளிநாட்டு ஆய்வுக் குழுக்களை வரவழைக்க நடவடிக்கை எடுக்கப்படும்

சீனாவில் தயாரிக்கப்பட்ட K-8 ரக ஜெட் விமானங்கள் குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிவுறுத்தலின் பேரில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றார்

வாரியபொல, மேல் மினுவங்கேட்டின் வெலகெதர பகுதியில் உள்ள தென்னந்தோப்பில் இலங்கை விமானப்படையின் பயிற்சி விமானம் ஒன்று கடந்த வெள்ளிக்கிழமை விபத்துக்குள்ளாகியமையும் குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply