துப்பாக்கி ரவைகளுடன் ஜனாதிபதி செயலகத்தில் கைதான இராணுவ சிப்பாய்

துப்பாக்கி ரவைகளை தனது பையில் மறைத்துக்கொண்டு ஜனாதிபதி செயலகத்திற்குள் நுழைய முயன்ற இராணுவ சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டதாக ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இராணுவ சமிக்ஞைப் படையில் கடமையாற்றியவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேகநபர் ஜனாதிபதி செயலகத்தில் கடமையாற்றியவர் எனவும், கடந்த 20ஆம் திகதி விடுமுறையில் லுணுகம்வெஹரவில் உள்ள அவரது இல்லத்திற்குச் சென்று மீண்டும் கடமைக்காக திரும்பியபோது ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவின் அதிகாரிகள், ஜனாதிபதி செயலகத்தின் பொது நுழைவாயிலுக்கு அருகில் வைத்து குறித்த சிப்பாயின் பயணப் பையை ஸ்கேன் செய்து பார்த்தபோது, ​​பைக்குள் T-56 ரக துப்பாக்கிக்குரிய ரவைகள் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply