தேர்தல் ஆணைக்குழு எடுத்துள்ள விசேட தீர்மானம்

தேர்தலின் போது எடுக்கும் முடிவுகளை அறிவிக்குமாறு அனைத்து அமைச்சுகள் மற்றும் அரசு நிறுவனங்களுக்கு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தல் ஆணையத்திற்கு தெரிவிக்காமல் சில அமைச்சுகள் சில முடிவுகளை எடுத்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். எவ்வாறாயினும் பின்னர் அது குறித்து ஆணைக்குழுவுக்கு தெரிவிக்கப்பட்டு தவறுகளை திருத்தியதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அமைச்சுகள் உள்ளிட்ட அரச நிறுவனங்களால் எடுக்கப்படும் சில முடிவுகள் சுதந்திரமான மற்றும் நீதியான தேர்தலுக்கு இடையூறாக அமையலாம் என்பதால் ஆணைக்குழு இந்த முடிவை எடுத்துள்ளது.

இதேவேளை, உள்ளூராட்சி சபைத் தேர்தலின் போது அரச சொத்துக்கள் பயன்படுத்தப்படுவதை தடுக்கும் வகையில், எதிர்காலத்தில் அரச அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட உள்ளதாக ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply