ஹங்குரன்கெத்த பிரதேச சபையின் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை இடை நிறுத்திவைக்க “ரிட் மனு“ தாக்கல்
ஹங்குரன்கெத்த பிரதேச சபைக்கு நடத்தப்பட உள்ள தேர்தலை இடை நிறுத்திவைக்கும் படி ‘ரிட் மனு ‘ ஒன்று தாக்கல் செய்யப்படுள்ளது.எதிர்வரும் தேர்தலில் போட்டியிட உள்ள சுயேட்சைக்குழு ஒன்றின் தலைவரான ஜே.எம். ஜயரத்ன என்பவரே மேற்படி வழக்கைத் தாக்கல் செய்துள்ளார்.
இவர் சட்டத்தரணி துசாரி ஜயவர்தன ஊடாக மேற்படி வழக்கைத் தாக்கல் செய்துள்ளார். இம்மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது,
கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதி 11.55 மணிக்கு தமது அணி ஹங்குரன்கெத்த பிரதேச சபைக்கான வேட்பு மனுவை தாக்கல் செய்ததாகவும் குறிப்பிட்ட நேரம் கழிந்து விட்டதாகவும் கூறி தமது வேட்புமனு தெரிவத்தாட்சி அதிகாரியினால் தள்ளுபடி செய்யபட்டதாகவும், பின்னர் அது தொடர்பாக மேற்கொண்ட ஆட்சேபனையும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
எனவே தமது வேட்பு மனு ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் எனவும் அதுவரை ஹங்குரன்கெத்த பிரதேச சபைக்கான தேர்தலை நடத்துவதை ஒத்திவைத்து தடை உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட வேண்டும் எனவும் அவர் மேன் முறையீட்டு நீதிமன்றத்தைக் கோரியுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply