நாட்டில் ஜனநாயகம் வீழ்ச்சி கண்டு வருகிறது : எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

நாடு முகம் கொடுத்து வரும் பிரச்சினைகளுக்கும் சவால்களுக்கும் தீர்வுகளையும் பதில்களையும் வழங்க முடியாத, வினைத்திறன் அற்ற அரச நிர்வாகமே இருப்பதாக 220 இலட்சம் மக்களுக்கும் நாளுக்கு நாள் நன்கு புலப்பட்டு வருகிறது. மறுபுறம் ஜனநாயகமும் வீழ்ச்சியடைந்து வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

குண்டசாலை தேர்தல் தொகுதியில் ஞாயிற்றுக்கிழமை (30) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார். அங்கு மேலும் உரையாற்றிய அவர்,

நாடு முகம் கொடுத்து வரும் பிரச்சினைகளுக்கும் சவால்களுக்கும் தீர்வுகளையும் பதில்களையும் வழங்க முடியாத, வினைத்திறன் அற்ற அரச நிர்வாகமே இருப்பதாக 220 இலட்சம் மக்களுக்கும் நாளுக்கு நாள் நன்கு புலப்பட்டு வருகிறது. ஜனாதிபதியும் அமைச்சர்கள் தலைமையிலான ஆளுந்தரப்பு உறுப்பினர்களின் கூற்றுப்படி, யார் கூட குரல் எழுப்புகின்றனரோ, அவர்கள் சிறைக்கு செல்ல நேரிடும் என தெரிவித்து வருகின்றனர். சிறைக்கு செல்லும் பட்டியலை தயாரித்து வருகிறோம் என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.

கூச்சல் போடுமளவுக்கு சிறைக்கு செல்ல நேரிடும் என்றும், பாராளுமன்ற கூட்டத்தையும் சிறையில் நடத்த வேண்டி வரும் என்றும் கருத்து தெரிவிக்கின்றனர். இதன் மூலம் நாட்டில் ஜனநாயகத்திற்கும், ஜனநாயக உரிமைகளுக்கும் இடமில்லை என்றே தோன்றுகிறது. மக்களுக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பல்வேறு கருத்துக்களையும் வாதங்களையும் முன்வைப்பதற்கு சுதந்திரம் இல்லை. எமது நாடு ஜனநாயக நாடு என்பதை இந்த அரசாங்கம் மறந்து விட்டு செயல்பட்டு வருகின்றது.

விமர்சனம் செய்வதும், தவறுகளை திருத்துவதும், தவறுகளை சுட்டிக்காட்டுவதும், உண்மைகளை சுட்டிக் காட்டுவதும், தரவுகளை முன்வைப்பதும் சிறைக்குச் செல்ல ஒரு காரணமாக அமையும் என்பதனை சொல்லாமல் சொல்லுகின்றனர். இவை ஜனநாயக உரிமைகளாகும். இவற்றைக் கூறி ஆளுந்தரப்பு அமைச்சர்கள் அச்சுறுத்தி வருகின்றனர்.

அரசாங்கத்தின் சில பாரதூரமான பேச்சுக்கள் ஜனநாயகத்தின் அழிவை சுட்டி நிற்கின்றன. அடிப்படை மனித உரிமைகள் மற்றும் பேச்சு சுதந்திரத்தையும் மீறுவதையும் இது எடுத்துக்காட்டுகின்றன. ஆளுந்தரப்பு உறுப்பினர்களின் அபிப்பிராயத்திற்கு ஏற்ப சிரேஷ்ட பிரஜைகளுக்கு வழங்கப்படும் 15மூ வட்டிச் சலுகை, வேலையில்லாப் பட்டதாரிகளுக்காக குரல் எழுப்புவது, அதிபர்- ஆசிரியர் சம்பளம் முரண்பாடு குறித்து பேசுவது, சூரிய சக்தி உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க எரிசக்தி குறித்து பேசுவது, டீசல் மாபியாவை விமர்சிப்பதும் எதிர்ப்பதும், பொது பாதுகாப்பு குறித்து பேசுவதும், நாட்டில் மேலேழுந்து வரும் கொலைக் கலாசாரம் குறித்து பேசுவதும் சிறைக்குச் செல்ல ஒரு காரணமாக இருந்து வருகிறது.

இதற்கு நாம் இடமளியோம். கருத்துச் சுதந்திரத்திற்கும் பேச்சுச் சுதந்திரத்திற்கும் எவ்வகையிலும் யாராலும் அச்சுறுத்தல் விடுக்க முடியாது. இது ஜனநாயகம் அல்ல. இவ்வாறு எமது வாயை மூட முடியாது. ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியும், பொதுத் தேர்தலில் 2ஃ3 மக்கள் ஆணையும் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காகவே அன்றி சர்வாதிகாரத்தை முன்னெடுக்கும் நோக்கில் வழங்கப்படவில்லை. மக்கள் பிரச்சினைகளை எதிர்க்கட்சி தொடர்ந்து பேசும்.

வறுமையை ஒழிக்கும் நடவடிக்கையில் காணப்பட்டு வரும் அரச மெத்தனப் போக்கு தொடர்பில் தொடர்ந்தும் குரல் எழுப்புவோம். நாணய நிதிய உடன்படிக்கையில் திருத்தங்களை கொண்டு வருவோம் என கூறிக் கொண்டு, முன்னாள் ஜனாதிபதியின் உடன்படிக்கையை பின்பற்றி, முன்னாள் ஜனாதிபதியின் தொங்கு பாலத்தால் கடந்து வருவது குறித்து நாம் தொடர்ந்து விமர்சிப்போம். நாட்டின் பிரதான எதிர்க்கட்சி என்ற வகையில், ஐக்கிய மக்கள் சக்தி பொது மக்களின் பேசும் உரிமைக்காக தொடர்ந்தும் குரல் எழுப்பும்.

சிறையிலடைப்போம் என கூறி நாட்டுக்கு நகைச்சுவைகளை வழங்க வேண்டாம். பிரச்சினைகளுக்கு தீர்வுகளையும பதில்களையும் வழங்கவே மக்கள் ஆணை வழங்கியுள்ளனர். ஆகவே, நாட்டுக்கு அவ்வப்போது நகைச்சுவைகளை பரிசளிப்பதை விடுத்து செய்து காட்டுங்கள். எனவே நகைச்சுவையான கருத்துக்களை விடாமல் வேலை செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

உலகில் வறுமையை ஒழிக்கவும், பொருளாதாரத்தை வலுப்படுத்தவும், நுண்கடன்கள் என்ற எண்ணக்கருவும் வேலைத்திட்டங்களும் முக்கியத்துவம் பெற்றுள்ளன. பங்களாதேஷில் உள்ள கிராமிய வங்கியின் மூலம் இவ்வெண்ணக்கரு முன் கொண்டுவரப்பட்டது. எமது நாட்டிலும் ஜனசவிய மற்றும் சமூர்த்தி மூலம் இது நடைமுறைப்படுத்தப்பட்டாலும் இன்று, நுண்நிதி கடன் வசதி திட்டங்கள் பல்வேறு வகையான வணிகங்களாக மாறியுள்ளன. வீட்டுப் பெண்களைப் தொடர்பு படுத்தி இந்த கடனை கொடுத்து, அப்பெண்களை கடன் மரண வலையில் சிக்க வைத்துள்ளனர். இது பரவலாக நடந்துள்ளன.

நாட்டின் பல பகுதிகளிலும் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதனால் பலர் பலவிதமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பெண்கள் பல பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றனர். இதன்மூலம், கடன் அடிமைகளை உருவாக்கப்பட்டுள்ளனர். இதனை தொழிலாக நடத்திவரும் கும்பலை கட்டுப்படுத்த வேண்டும். நுண்கடன் வசதிகளை வழங்கும் நடவடிக்கைகளை ஒழுங்குமுறைக்குட்படுத்த வேண்டும். இந்த கடன் மரண வலைக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி போராடும். இதனை ஒழங்குமுறைக்கு கீழ் கொண்டு வர ஐக்கிய மக்கள் சக்தி தயார் என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply