கொழும்பில் உள்ள தாமரை கோபுரத்திலிருந்து குதித்தவர் கைது
கொழும்பில் உள்ள தாமரை கோபுரத்திலிருந்து பாராசூட்டின் உதவியுடன் குதித்த அமெரிக்க பிரஜை ஒருவர் மருதானை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் தாமரை கோபுர நிர்வாகத்திற்கு தெரிவிக்காததே அதற்குக் காரணம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சந்தேக நபரான வெளிநாட்டவரிடம் நடத்திய விசாரணையில், தாமரை கோபுரத்திலிருந்து பாராசூட்டின் உதவியுடன் குதிக்கும் போட்டிக்காக வந்ததாகக் கூறினார்.
எனினும், போட்டி ரத்து செய்யப்பட்டதாகவும், அது குறித்து தனக்குத் தெரியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சந்தேகத்திற்குரிய வெளிநாட்டவர், பாராசூட்டின் உதவியுடன் உயரமான இடங்களிலிருந்து குதிப்பது தனது பொழுதுபோக்காக கொண்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளார்.
தாமரை கோபுரத்திலிருந்து குதித்த பிறகு, அவர் அருகிலுள்ள பாடசாலை வளாகத்தில் பாதுகாப்பாக தரையிறங்கினார், பின்னர் கைது செய்யப்பட்டார்.
அந்த வெளிநாட்டவர் ஒரு அனுபவம் வாய்ந்த பாராசூட்டர் என்றும், உலகின் பல்வேறு இடங்களிலிருந்து குதித்து அந்தக் காட்சிகளை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply