தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சரத் பொன்சேகாவை ஆதரிக்கலாம்
எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப் பினருக்கும் இடையில் நேற்று இரவு கொழும்பில் ஒரு விசேட சந்திப்பு நிகழ்ந்துள்ளது. இச்சந்திப்பின் பின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சரத் பொன்சேகாவை ஆதரிக்கலாமென கொழும்பில் பலமான ஒரு செய்தி உலாவுவதாக எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரை ஆதரிக்கும் சிங்கள பத்திரிகையொன்றில் பணிபுரியும் ஊடகவியலாளர் ஒருவர் `ரெலோ நீயூஸ்`க்கு கருத்து தெரித்தார்.
ஜெனரல் சரத் பொன்சேகாவுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றத் தலைவர் இரா.சம்பந்தன், பொதுச் செயலாளர் மாவை சேனாதிராஜா மற்றும் சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இச்சந்திப்பில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் கலந்து கொண்டுள்ளார்.
இம்மாதம் 9ம் திகதி நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் சுரேஸ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈ. பி. ஆர். எல். எப். அமைப்பைச் சேர்ந்த வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் ஆட்சி மாற்றத்துக்கு ஜெனரல் சரத் பொன்சேகாவை ஆதரிக்க வேண்டுமென கருத்தை முன் வைத்தார்.
எஸ்.எம்.எஸ் [Sampanthar Mavai-senathirajah, Suresh-premachandran] சம்பந்தர், மாவை, சுரேஸ் – திருமூர்த்திகள் ரி.என்.ஏ.யில் (Tamil National Alliance) ஏகபோக ஆதிக்கம் செலுத்துவதாக அண்மையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பபின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே. தங்கேஸ்வரி குற்றச்சாட்டியுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : TELOnewsYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply