ராகமவில் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது
ராகம பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேற்கு மாகாண வடக்கு குற்றப்புலனாய்வு பிரிவைச் சேர்ந்த அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் நேற்று திங்கட்கிழமை (31) சோதனை மேற்கொண்ட போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் களனி பகுதியைச் சேர்ந்த 24 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
சந்தேக நபரிடமிருந்து 13 கிராம் 500 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள், போதைப்பொருள் விற்பனை மூலம் பெறப்பட்டதாக சந்தேககிக்கப்படும் 1,104,300 ரூபா பணம், சுமார் 4 மில்லியன் ரூபா மதிப்புடைய தங்க ஆபரணங்கள், 02 மின்னணு தராசுகள் மற்றும் 01 கைப்பேசி என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும், மேற்கு மாகாண வடக்கு குற்றப்புலனாய்வு பிரிவினர் குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply