யாழில் குடும்பஸ்தர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு
யாழ்ப்பாணம், உரும்பிராயைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் தனது பேச்சினை மீறி மனைவியும் மகளும் வேலைக்கு செல்ல முற்பட்டதால் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
கடந்த மார்ச் மாதம் 25 ஆம் திகதி மகளும் மனைவியும் வேலைக்குச் செல்ல முற்பட்டவேளை குறித்த குடும்பஸ்தர் தனக்கு தானே பெற்றோலை ஊற்றி தீ வைத்துள்ளார்.
இந்நிலையில், தீக்காயங்களுக்குள்ளான அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை (01) உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply