இலங்கையில் இதய நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
இலங்கையில் நாளாந்தம் பதிவாகும் இதய நோயாளர்களின் எண்ணிக்கை உயர்வடைந்து வருவதாக இருதயநோய் நிபுணர் வைத்தியர் கோட்டாபய ரணசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, தினசரி 175 முதல் 200 பேர் வரை இருதய நோயாளர்களாக அடையாளங் காணப்படுவதாகவும் வைத்தியர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களே இருதய நோய்க்கு வழிவகுப்பதாக வைத்தியர் கோட்டாபய ரணசிங்க தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply